பஞ்சாபில் வன்முறை கும்பலால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளரது கை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டது

பஞ்சாபில் வன்முறை கும்பலால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளரது கை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டது. 


" alt="" aria-hidden="true" />
 
பாட்டியாலா பகுதியில் ஊரடங்கை மீறி காரில் வந்த கும்பலிடம் அனுமதி சீட்டை கேட்ட போலீசார் மீது அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில், உதவி ஆய்வாளர் ஹர்ஜித் சிங்கின் கை துண்டானது. 
 
இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் ஹர்ஜித் சிங் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் வெட்டப்பட்ட கை வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டது. 
 
சுமார் ஏழரை மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் 50 வயதான உதவி ஆய்வாளருக்கு கையை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.